Author Archives: தமிழ் வண்ணன்

தண்ணீர் பிச்சை எடுக்கும் நாள் வரும்?

வெகு நாட்களுக்குப் பிறகு கல்லூரி நண்பனிடம் தொலைபேசினேன். வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு பேச்சு அவனுடைய ஊர் பற்றி திரும்பியது. விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்கின்ற சிறுவிவசாயிகள் அதிகம் வசிக்கின்ற ஒரு தமிழக சிற்றூர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சரியான பருவ மழை பெய்யாமல் போனதாலும், அம் மக்களுக்கு ஜீவாதாரமாக இருந்து வந்த பெண்ணையாறும் வறண்டு போனதால் அன்றாட வாழ்வே பெரும்பாடாக இருப்பதாக புலம்பினான். நிலத்தடி நீரும் கைவிரித்து விட்டதாகவும், எத்தனை அடிக்கு போர்துளைத்தாலும் வெறும் சேற்று நீர்… Read More »

ஆங்கில வழிக் கல்வி

மொழித் திறன் என்பது மனிதர்களுக்கே இருக்கக் கூடிய ஒரு தனித்துவமான திறனாகும். ஏனைய மனிதக் குரங்கினங்கள், டால்பின் வகை விலங்குகளில் கூட மொழித் திறன் காணப்பட்டாலும், அதிகம் வளர்ச்சியடைந்த மொழித் திறன் என்னவோ மனிதர்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையான மொழிகள் உருவாக்கம் பெற்று மனிதர்களால் பேசப்பட்டு வருகின்றன. சொல்லப் போனால் மனிதர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைப் பகுத்தறிந்து பேசவும், வாசிக்கவும், எழுதவும் ஆற்றல் உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

அரசியலில் தமிழ் இளைஞர்கள்

தமிழ் நாட்டில் ஓர் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து மாறி மாறி ஆட்சி செய்து வந்த தலைமைகள் மாறிவிட்டன. ஒருவர் காலமாகிவிட்டார், மற்றொருவர் காட்சியிலிருந்து மறைந்துவிட்டார். இது வரை காலமும் தமிழ் நாட்டு மக்கள் இந்த இருவர் தலைமையிலான ஆட்சியையே மாறி மாறித் தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், இனி யாரை மக்கள் தேர்ந்தெடுக்கப் போகின்றனர் என்ற பெருவினா அரசியல் வட்டாரத்தில் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தின் மத்தியிலும் காணப்படுகின்றது.

நடமாடும் பேய்கள்

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பல பேய் படங்களை பார்த்துவிட்டேன். ஒரு காலத்தில் காதல் படங்கள் தமிழில் திரண்டாக இருந்து வந்தது. இப்போது அது மாறி பேய் படங்கள் என்றாகிவிட்டது. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பல பேய் படங்கள் வெளியாகிவருகின்றன. தமிழில் பீட்சா, முனி, காஞ்சான போன்ற பல படங்களின் அடுத்தடுத்த வெற்றியால், தொடர்ந்து பேய் படங்கள் பல வெளியாக காரணமாக இருந்தது எனலாம். பெரும்படங்கள் தான் என்றில்லை, ஊடூப்பை திருப்பினால் கூட குறும்படங்களில் கூட பல… Read More »

ஜல்லிக்கட்டு போராட்டங்கள்

இன்றைய நவீன உலகம் அதி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு நாளும் நமது வாழ்க்கை முறை மாறிக் கொண்டே வருகின்றது. புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாத அளவிற்கு வந்து சேர்கின்றன. இந்த அதி வேகச் சுழற்சியில் நாம் நமது பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலிருந்து நம்மை அறியாமலேயே விலகிச் சென்று கொண்டிருக்கின்றோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்வில் ஒன்றும் புதியவை அல்ல தான். ஆண்டாண்டு காலமாகத் தலைமுறை தலைமுறையாக நமது… Read More »

மதங்கள் கடந்த ஆன்மிகம்

மனித இனமானது தனது இத்தனை ஆண்டு கால வரலாற்றில் ஒரு போதும் சும்மா இருந்திருக்கவில்லை. அவர்கள் எதையாவது தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். தமக்கு தெரியாத பற்பல விடயங்கள் இருப்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களின் தேடல் அளப்பரியது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது தேடலை வெவ்வேறு பரிமாணங்களில் தேடினான், தேடிக் கொண்டிருக்கின்றான். ஒரு சிலர் அதனை பரம் பொருள் என்று அழைக்கின்றார்கள், ஒரு சிலரோ அதனை மெய்ப் பொருள் என்று அழைக்கின்றார்கள். அந்த தேடலை மனிதர்களோ, சந்தர்பங்களோ… Read More »