Category Archives: சமூகம்

ஆங்கில வழிக் கல்வி

மொழித் திறன் என்பது மனிதர்களுக்கே இருக்கக் கூடிய ஒரு தனித்துவமான திறனாகும். ஏனைய மனிதக் குரங்கினங்கள், டால்பின் வகை விலங்குகளில் கூட மொழித் திறன் காணப்பட்டாலும், அதிகம் வளர்ச்சியடைந்த மொழித் திறன் என்னவோ மனிதர்களில் மட்டுமே காணப்படுகின்றது. அதுவும் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு வகையான மொழிகள் உருவாக்கம் பெற்று மனிதர்களால் பேசப்பட்டு வருகின்றன. சொல்லப் போனால் மனிதர்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட பல மொழிகளைப் பகுத்தறிந்து பேசவும், வாசிக்கவும், எழுதவும் ஆற்றல் உடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.

நடமாடும் பேய்கள்

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பல பேய் படங்களை பார்த்துவிட்டேன். ஒரு காலத்தில் காதல் படங்கள் தமிழில் திரண்டாக இருந்து வந்தது. இப்போது அது மாறி பேய் படங்கள் என்றாகிவிட்டது. தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் பல பேய் படங்கள் வெளியாகிவருகின்றன. தமிழில் பீட்சா, முனி, காஞ்சான போன்ற பல படங்களின் அடுத்தடுத்த வெற்றியால், தொடர்ந்து பேய் படங்கள் பல வெளியாக காரணமாக இருந்தது எனலாம். பெரும்படங்கள் தான் என்றில்லை, ஊடூப்பை திருப்பினால் கூட குறும்படங்களில் கூட பல… Read More »

மதங்கள் கடந்த ஆன்மிகம்

மனித இனமானது தனது இத்தனை ஆண்டு கால வரலாற்றில் ஒரு போதும் சும்மா இருந்திருக்கவில்லை. அவர்கள் எதையாவது தேடிக் கொண்டே இருக்கின்றார்கள். தமக்கு தெரியாத பற்பல விடயங்கள் இருப்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள். அவர்களின் தேடல் அளப்பரியது. ஒவ்வொரு தனி மனிதனும் தனது தேடலை வெவ்வேறு பரிமாணங்களில் தேடினான், தேடிக் கொண்டிருக்கின்றான். ஒரு சிலர் அதனை பரம் பொருள் என்று அழைக்கின்றார்கள், ஒரு சிலரோ அதனை மெய்ப் பொருள் என்று அழைக்கின்றார்கள். அந்த தேடலை மனிதர்களோ, சந்தர்பங்களோ… Read More »

அயலகத்தில் தமிழ் மொழி

போன வாரம் ஒரு விருந்திற்கு நானும் எனது மனைவியும் தமிழ் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கே மேலும் சில தமிழ் குடும்பத்தினரையும் சந்திக்க நேர்ந்தது. அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். டொராண்டொவை விட்டு இங்கே வந்த புதிதில் இங்குத் தமிழர்களைச் சந்திப்போம் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டை விட்டு வெகுதொலைவில் வாழ்கின்ற எங்களுக்கு இத்தகைய சந்திப்புக்கள் மனதை இலேசாக்கி சந்தோசமடையச் செய்தது என்றே சொல்ல வேண்டும். விருந்தில் பெரியவர்கள் ஒரு பக்கம் பேச்சில் ஆழ்ந்த போது,… Read More »