அயலகத்தில் தமிழ் மொழி

போன வாரம் ஒரு விருந்திற்கு நானும் எனது மனைவியும் தமிழ் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கே மேலும் சில தமிழ் குடும்பத்தினரையும் சந்திக்க நேர்ந்தது. அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். டொராண்டொவை விட்டு இங்கே வந்த புதிதில் இங்குத் தமிழர்களைச் சந்திப்போம் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தமிழ்நாட்டை விட்டு வெகுதொலைவில் வாழ்கின்ற எங்களுக்கு இத்தகைய சந்திப்புக்கள் மனதை இலேசாக்கி சந்தோசமடையச் செய்தது என்றே சொல்ல வேண்டும். விருந்தில் பெரியவர்கள் ஒரு பக்கம் பேச்சில் ஆழ்ந்த போது, அங்கே வந்திருந்த சிறுவர்கள் அனைவரும் ஒன்று கூடி விளையாடினர். அதில் ஒரு குழந்தை தற்போது தான் தமிழ்நாட்டிலிருந்து பெற்றோரோடு வந்திருக்கின்றாள். அதனால் தான் என்னவோ மற்ற குழந்தைகளும் சரளமாகத் தமிழில் பேசின.

Continue reading